Wednesday, November 13, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு - உலகமெங்கும் விமானப் போக்குவரத்து பாதிப்பு

தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு – உலகமெங்கும் விமானப் போக்குவரத்து பாதிப்பு

தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு (IT outage) காரணமாக உலகமெங்கும் விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. வங்கி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட சேவைகளும் இதனால் பாதிப்பை சந்தித்துள்ளன.

பல்வேறு விமான நிலையங்களில் விமானச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் விமானப் போக்குவரத்து தாமதமாகியும் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சைபர்-செக்யூரிட்டி நிறுவனமான க்ரவுட்ஸ்ட்ரைக் இந்தச் செயலிழப்புக்குப் பொறுப்பேற்றுள்ளது. மைக்ரோசாஃப்ட் வின்டோஸில் செயல்படும் கணினி உள்ளிட்ட கருவிகளில் வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்க உருவாக்கப்பட்ட ‘ஃபால்கன் ஆண்டி-வைரஸ்’ (Falcon antivirus software) மென்பொருளைப் புதுப்பித்த போது (update) இந்தச் செயலிழப்பு நிகழ்ந்துள்ளது என்கிறது அந்த நிறுவனம்.

இந்த தகவல் தொழில்நுட்பச் (ஐ.டி.) செயலிழப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (Microsoft Windows) கருவிகளுக்கான ‘கன்டென்ட் அப்டேட்டில்’ ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இந்த ஐ.டி. செயலிழப்புக்கு காரணம்.

இது மற்ற இயங்கு தளங்களைப் (Operating Systems) பாதிக்கவில்லை. மேலும் இது ஒரு சைபர் தாக்குதல் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

உலகமெங்கும் விடுமுறை கொண்டாட்டங்களுக்காக பயணிப்பவர்களின் பயண திட்டத்தில் பாதிப்பை உருவாக்கும் என்று முதலீட்டாளர்கள் உணர்ந்த நிலையில் பங்குசந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட துவங்கியது.

ஐ.டி. செயலிழப்பின் காரணமாக க்ரவுட்ஸ்ட்ரைக்கின் பங்குகள் 15% வரை வீழ்ச்சி அடைந்தன. மைக்ரோசாஃப்ட் மட்டுமின்றி பயணம் மற்றும் விருந்தோம்பல் துறையில் இயங்கும் நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சியடைந்தன.

- Advertisment -

Most Popular

Recent Comments