Monday, September 16, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுவங்கதேசத்தில் நிலவும் அசாதாரண நிலை இந்திய ஜவுளி தொழிலில் தாக்கம் ஏற்படுத்தும் - பருத்தி கூட்டமைப்பு...

வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண நிலை இந்திய ஜவுளி தொழிலில் தாக்கம் ஏற்படுத்தும் – பருத்தி கூட்டமைப்பு துறையினர்

வங்கதேசத்தில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை, ஒட்டுமொத்த இந்திய ஜவுளி சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து தொழில்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொழில் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இந்திய பருத்தி கூட்டமைப்பின் (ஐசிஎஃப்) தலைவர் துளசிதரன், மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் (ஆர்டிஎஃப்)தலைவர் ஜெயபால் ஆகியோர்`இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

தற்போது வங்க தேசத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை, இந்திய ஜவுளி சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து தொழில்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். வங்கதேசப் பொருளாதாரத்தில் ஜவுளித் தொழில் 86 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து அதிக அளவு பருத்தி மற்றும் நூல் வங்கதேசத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போதைய சூழலில் சர்வதேச சந்தையில் உள்ள பருத்தி விலையைவிட, இந்திய பருத்தி விலை கிலோ ரூ.17 வரை அதிகமாக உள்ளது. மேலும், பாலியஸ்டர், விஸ்கோஸ் போன்ற செயற்கை இழை விலையும் சர்வதேச சந்தை விலையை விட ஒரு கிலோவுக்கு ரூ.24, ரூ.26 வீதம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், இந்திய ஜவுளித் தொழில் துறையினரின் சர்வதேச சந்தை போட்டித் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் வங்கதேசத்தில் இருந்து பருத்தியுடன், பெருமளவு பாலியஸ்டர், விஸ்கோஸ் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஜவுளிப் பொருட்கள் குறைந்த விலையில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது.

வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால், இந்தியாவின் பருத்தி, நூல் ஏற்றுமதி பாதிக்கும். இதனால் ஒட்டுமொத்த இந்திய ஜவுளி சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து தொழில்களும் பாதிக்கப்படும். வங்கதேசத்தில் விரைவில் அமைதி திரும்பி, வணிக நடவடிக்கைகள் வழக்கம்போல நடைபெறுவது அவசியம்.

அதேபோல, இந்திய ஜவுளித்தொழில் அமைப்பினர் முன்வைத்துள்ள, பருத்திக்கு இறக்குமதி வரி 11 சதவீதத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும். அப்போதுதான், இந்திய ஜவுளித் தொழில் நெருக்கடியில் இருந்து மீண்டு வரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments