Monday, September 9, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஜம்மு காஷ்மீரில் 3 கட்ட தேர்தல், ஹரியானாவில் ஒரே கட்ட வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம்...

ஜம்மு காஷ்மீரில் 3 கட்ட தேர்தல், ஹரியானாவில் ஒரே கட்ட வாக்குப்பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலானது 3 கட்டமாக நடைபுெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல, ஹரியானாவில் ஒரே கட்டமாக வரும் அக்டோபர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்ட தகவலின்படி, ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதையடுத்து, செப்டம்பர் 25ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் மூன்றாம் கட்ட தேர்தல் வரும் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவுக்கு ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 4ஆம் தேதி, இரண்டு மாநில தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. 

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராஜீவ் குமார், “ஹரியானாவில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 73 பொது, எஸ்சி ரிசர்வ் தொகுதிகள் 17 உள்ளன. ஹரியானாவில் மொத்தம் 2.01 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில், 1.06 கோடி பேர் ஆண்கள், 0.95 கோடி பேர் பெண்கள். 4.52 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள். 40.95 லட்சம் பேர் இளம் வாக்காளர்கள். ஹரியானாவின் வாக்காளர் பட்டியல் 27 ஆகஸ்ட் 2024 அன்று வெளியிடப்படும்.

மக்களவை தேர்தலின்போது, ஜம்மு காஷ்மீர் மக்கள் பெருமளவில் பங்கேற்றிருந்தனர். நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்தனர். அவர்களின் முகத்தில் உள்ள பிரகாசம் இதற்கு ஒரு சான்றாக இருந்தது. முழுத் தேர்தலும் செழிப்பான அரசியல் பங்கேற்பு இருந்தது. ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தின் அடுக்குகள் வலுப்பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 74 பொது, எஸ்சி ரிசர்வ் தொகுதிகள் 7 உள்ளனர். பழங்குடி ரிசர்வ் தொகுதிகள் 9 உள்ளன. ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் 87.09 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

அதில், 44.46 லட்சம் பேர் ஆண்கள். 42.62 லட்சம் பேர் பெண்கள். 3.71 லட்சம் முதல்முறை வாக்காளர்கள். 20.7 லட்சம் இளம் வாக்காளர்கள். வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி, அமர்நாத் யாத்திரை முடிவடையும். இறுதி வாக்காளர் பட்டியலும் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியிடப்படும்” என்றார்.

- Advertisment -

Most Popular

Recent Comments