Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் விசாரணை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை அயனாவரத்தில் அவரது வீட்டின் முன்பாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஒரு மாநில கட்சியின் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் பலரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த வழக்கில் நாள் தோறும் பலரது பெயர்கள் அடிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பல திருப்பு முனைகள் இந்த வழக்கில் வந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன், வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடிய நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் போலீசர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன், செந்திலுடன் அடிக்கடி போனில் பேசியதாக பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் மனைவியிடம் (மோனிஷா) சந்தேகத்தின் பேரில் போலீசார், விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், வழக்கு ஒன்றிற்காக வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன், செந்திலுடன் செல்போனில் பேசியதாக பிரபல இயக்குனரின் மனைவி போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்டமாக பிரபல இயக்குநரிடமும் (நெல்சன்) விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். நெல்சன் திலீப் குமாரின் மனைவி மோனிஷாவும் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

Recent Comments