ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் 26 அரசு பள்ளிகளுக்கு ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சூரிய ஆற்றலின் உதவியுடன் மழை நீர் சேகரிப்பை நடைமுறைப்படுத்துதல், மக்கும் உரம் தயாரித்தல், காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பசுமைப் பணிகளை இப்பள்ளிகள் மேற்கொள்ளும். மேலும் பள்ளிகளின் அனைத்து மின்தேவைகளும் சூரிய ஆற்றல் உற்பத்தி மூலம் பெறப்படும்.