Tuesday, February 18, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்நெல்லையில் கல்லூரி மாணவியை மதுகுடிக்க அழைத்த 2 பேராசிரியர்கள் பணிநீக்கம்

நெல்லையில் கல்லூரி மாணவியை மதுகுடிக்க அழைத்த 2 பேராசிரியர்கள் பணிநீக்கம்

நெல்லை

நெல்லையில் கல்லூரி மாணவியை மதுகுடிக்க அழைத்த 2 பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாளையங்கோட்டையில் அரசு உதவிபெறும் தூய சவேரியார் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு, தனியார் விடுதியில் மது அருந்திய கல்லூரியின் பேராசிரியர்களான ஜெபஸ்டின்(40), பால்ராஜ்(40)ஆகியோர் மதுபோதையில் கல்லூரி மாணவிக்கு போன் செய்து ஆபாசமாக பேசி மாணவியை மது குடிக்க அழைத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினார். உடனே மாணவியின் பெற்றோர் பாளையங்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரில் பேராசிரியர் ஜெபஸ்டினை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பேராசிரியர் பால்ராஜூக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர். இந்த நிலையில், தனியார் கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த 2 பேராசிரியர்களை பணிநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments