இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசாநாயக்க இன்று பதவி ஏற்றார். இன்று (செப்.,23) இலங்கையின் ஒன்பதாவது அதிபராக அவர் பதவியேற்றார்.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள அதிபர் தேர்தலில் ஜனதா விம்முக்தி பெரமுன (JVP) – என்.பி.பி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஜெவிபி தலைவர் அனுர குமார திசநாயக இலங்கையின் 9வது அதிபராகிறார். இலங்கையில் நடந்த பொருளாதார நிலையின்மை பிரச்சனைக்குப் பிறகு நடக்கும் முதல் அதிபர் தேர்தல் இது. இந்த தேர்தலில் வென்று அதிபர் ஆகி இருக்கும் அநுர மீது எதிர்பார்ப்பு அதிகள்ளது.