தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் காந்திராஜன் தலைமையில் குழு உறுப்பினர்கள் நேற்று காலை தனிப்படகில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையே ரூ.37 கோடியில் நடந்து வரும் கண்ணாடி பால பணிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் குழு தலைவர் காந்திராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
இயற்கை சீற்றங்கள் குறைவாக இருந்தால் வரும் ஜனவரி மாதத்திற்குள் பணிகளை முடித்துவிடலாம். அதன் பின்னர் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும்.இந்தியா முழுவதும் இருந்து வரும் பயணிகள் மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு உன்னத நிலையாக, ஆக்ராவின் தாஜ்மகால் எவ்வாறு உலக அளவில் பேசப்படுகிறதோ கன்னியாகுமரியின் இந்த இடமும் எதிர்காலத்தில் பேசப்படும். அதற்கெல்லாம் முழு முதற்காரணம் கலைஞர் இந்த திருவள்ளுவர் சிலையை நிறுவியதுதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.