ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாநாடு அஜர்பைஜானின் பாகு நகரில் நேற்று தொடங்கியது. இதில் 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அடுத்த 12 நாட்கள் நடக்கும் இம்மாநாட்டில் முதல் நாளான நேற்று, பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப போராட புதிய பருவநிலை நிதி இலக்கை ஏற்றுக் கொள்ள ஐநா பருவநிலை தலைவர் சைமன் ஸ்டீல் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருதலைப்பட்சமான வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அடுத்த 12 நாள் நிகழ்ச்சிகள் குறித்து முடிவு எடுக்கப்படாமலேயே முதல் நாள் கூட்டம் முடிந்தது.