தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறிய பின் வலுவிழக்கும் எனவும், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நகராமல் அதே இடத்தில் நீடிப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மணிக்கு 13 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என நேற்று இரவு 9 மணியளவில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்ந்து, வடக்கு – வடமேற்கு திசையில் நகரும் எனவும், புயலாக வலுவடையும் எனவும் தெரிவித்துள்ளது. பின்னர் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 30 ஆம் தேதி காலை, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது கூறியுள்ளது. அப்போது, மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.