டில்லியில் நிருபர்கள் சந்திப்பில், அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் இறுதியில் நீதி வெல்லும். ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுர்களான அதிஷி, சவுரவ் பரத்வாஜ், சத்யேந்தர் ஜெயின் ஆகியோர், பொய் வழக்கில் கைது செய்யப்படுவார்கள். போக்குவரத்துத் துறையில் அதிஷி மீது அவர்கள் ஒரு போலி வழக்கைத் தயாரிக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிந்தோம்.
மேலும் பெண்களுக்கு இலவச பஸ் பயணத் திட்டத்தை நிறுத்த விரும்புகிறார்கள். நான் உயிருடன் இருக்கும் வரை பெண்களுக்கான இலவசப் பஸ் பயணத் திட்டத்தை நிறுத்த விடமாட்டேன். அமலாக்கத்துறை, சி.பி.ஐ., மற்றும் வருமான வரித்துறைக்கு அதிஷியை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என சமீபத்தில் சி.பி.ஐ, அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.