தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், கடற்கொள்ளையர்கள் அச்சுறுத்துவதும் தொடர்கதையாகவே உள்ளது.
தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறது.
இருப்பினும், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதுமாக உள்ளது.
இந்த விவகாரத்தில், மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், “இலங்கை இந்திய மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தை இல்லை. பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டது” என இலங்கை அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
இலங்கை இந்திய மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தை இல்லை. பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டது. இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார்கள். தொழில்நுட்ப ரீதியான பிரச்சினை உள்ளிட்டவையே அந்த பேச்சில் இடம் பெறும். மனிதாபிமான அடிப்படையில் இந்த விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தை நடைபெறாது. இவவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.