குவைத்தில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில் உடைமைகள் வராததால் 248 பயணிகள் தவிப்பு. 12 உடைமைகள் மட்டுமே கன்வேயர் பெல்ட்டில் வந்ததால், அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம்.
மோசமான வானிலையால் விமானத்தின் எடையைக் குறைக்க உடைமைகள் அனைத்தும் குவைத் விமான நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் பயணிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று கொடுக்கப்படும் என அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.