உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் தண்ணீர் மற்றும் இரை தேடி ஹோட்டலுக்குள் புகுந்த புள்ளிமான்.
வனத்துறை அதிகாரிகள் வருவதற்குள் அங்கிருந்து தப்பியோடி, அருகிலிருந்த காப்புக் காட்டுக்குள் புகுந்தது.
கோடை காலம் துவங்கி உள்ளதால் காப்புக்காடுகளில் உள்ள மான் உள்ளிட்ட உயிரினங்களுக்கு வனத்துறையின் சார்பில் தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.