Saturday, April 12, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரி விதித்தது சீனா

அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரி விதித்தது சீனா

பீஜிங்

டொனால்டு டிரம்ப் சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரிகளை 145 சதவீதமாக உயர்த்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை 125 சதவீதமாக சீனாவும் உயர்த்தியது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்தடுத்து சீனாவுக்கு வரி மேல் வரி விதித்து வருகிறார். சீனாவும் பதிலுக்கு வரி போட துவங்கியது. சீனாவுக்கான அமெரிக்காவின் மொத்த வரி 104 சதவீதமாக உயர்ந்தது.

இதனால் சீனா, அமெரிக்க பொருட்களுக்கான வரியை 84 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது. இதையடுத்து கடும் கோபம் அடைந்த, அதிபர் டிரம்ப் சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 145% ஆக உயர்த்தி அதிரடி காட்டினார்.

இதையடுத்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு, சீனா அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை 125 சதவீதமாக உயர்த்தியது. சீனா மீது அமெரிக்கா விதித்த அதிக வரிகள் சர்வதேச பொருளாதார வர்த்தக விதிகளை மீறுகிறது. முற்றிலும் ஒருதலைப்பட்சமான மிரட்டல் மற்றும் வற்புறுத்தலாகும் என்று சீன நிதி அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், உறுதியாக எதிர் நடவடிக்கைகளை எடுப்போம். இறுதிவரை போராடுவோம்.அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து கூடுதல் வரிகளை விதித்தால், சீனா அதைப் புறக்கணிக்கும் என்றும் சீன நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments