Thursday, May 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாபோர் நிறுத்த விவகாரம் -  நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

போர் நிறுத்த விவகாரம் –  நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

டெல்லி

 டெல்லியில், காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பிறகு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அவர்கள் கூறுகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் அதுபற்றி பிரதமர் மோடி மவுனம் சாதித்து வருகிறார். எனவே, அவரது மவுனம் குறித்து கேள்வி எழுப்புவதற்காக நாடு முழுவதும் “ஜெய்ஹிந்த்” என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

16-ந் தேதி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளிப்பார் என்று கூறினர்.

- Advertisment -

Most Popular

Recent Comments