Monday, July 14, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்கேரள நர்ஸ் நிமிஷா பிரியா தூக்குத் தண்டனையிலிருந்து தப்புவாரா?

கேரள நர்ஸ் நிமிஷா பிரியா தூக்குத் தண்டனையிலிருந்து தப்புவாரா?

டெல்லி

ஏமன் நாட்டில் கொலைக் குற்றச்சாட்டில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு நாளை மறுநாள் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரூ.8.5 கோடி வரை குருதிப் பணம் கொடுக்க முன்வந்தும் கூட அந்த முயற்சியில் பலன் இல்லாமல் இருக்கிறது. இதற்கிடையே குருதிப் பணம் விவகாரத்தில் என்ன சிக்கல் என்பதை மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கேரள நர்ஸ் நிமிஷா பிரியா என்பவர் ஏமன் நாட்டில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார். ஏமன் நாட்டை சேர்ந்த மஹ்தி என்பவரைக் கொன்ற குற்றச்சாட்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் அதாவது ஜூலை 16ம் தேதி அவருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது ஏமன் நாட்டில் நடக்கும் வழக்கு என்பதால் நிமிஷா பிரியா விவகாரத்தில் தலையிடுவதற்கு அளவே அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. மேலும், இது ஒரு மிகவும் சிக்கலான பிரச்சினை என்று குறிப்பிட்ட மத்திய அரசு வழக்கறிஞர் இதில் தலையிடுவதற்குச் சில தூதரக வழிகளே உள்ளன என்றும் அவை அனைத்திலும் அரசு முயன்று வருவதாகவும் தெரிவித்தது.

நீதிபதி சந்தீப் மேத்தா தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர், “ஏமனில் என்ன நடக்கிறது என்று எங்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை” என்றார். மேலும், ஏமன் அதிகாரிகள் மற்றும் அங்குள்ள வழக்கறிஞருடன் தொடர்பில் இருப்பதாகவும், பேச்சுவார்த்தைகள் நடப்பதால் மரண தண்டனையைத் தாமதப்படுத்தக் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், நிமிஷா பிரியாவின் உயிரைக் காப்பாற்ற இருக்கும் ஒரே வழி குருதிப் பணம் தான் என்றும் குறிப்பிட்டனர். ஏமனில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் குருதிப் பணம் வாங்கி சமரசம் செய்து கொள்வது மட்டுமே ஒரே வழி என்று நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.

- Advertisment -

Most Popular

Recent Comments