கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அதிகாரிகள் நிரந்தரமாக ரத்து செய்துள்ளதாக இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் தெரிவித்துள்ளது
ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதித்த மரண தண்டனை “ரத்து செய்யப்பட்டு முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது” என்று இந்திய கிராண்ட் முஃப்தி காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முசல்யாரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிராண்ட் முப்தி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஏமன் அரசிடமிருந்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.