தேனி. ஆக. 05-
தேனி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று இதுகுறித்து விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த முகாமில் இலவச வீட்டு மனை பட்டா, புதிய ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் என மொத்தம் 263 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த கூட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆன ராமகிருஷ்ணன் என்பவர் தனது மகளின் உயர்கல்வி படிப்பிற்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுத்தார் அதனை கலெக்டர் ரஞ்சித் சிங் உடனடியாக பரிசீலனை செய்து மாவட்ட ஆட்சியரின் விருப்பரிமை நிதியிலிருந்து ரூ27,444-க்கான காசோலையை அந்த முகாமிலேயே கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.