தேசிய குடற்புழு நீக்க தினம், பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய இரண்டு தினங்கள் என 6 மாதத்திற்கு ஒரு முறை அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக, 1 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றது.
மாத்திரை உட்கொள்வதினால், குடற்புழு நீக்க அல்பெண்டசோல் குடற்புழுக்கள் முற்றிலுமாக நீக்கப்படுகிறது. இரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. நினைவாற்றல், கற்றல்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடிமையங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
அந்தவகையில், தேனி அருகே உள்ள லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புகு நீக்க நாள் விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமை தாங்கி பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் குடல் புழு நீக்க நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.