Saturday, December 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்இண்டிகோ விமான சேவை ரத்து - பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரெயில்கள்

இண்டிகோ விமான சேவை ரத்து – பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரெயில்கள்

சென்னை

இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கே.எஸ்.ஆர். பெங்களூருவில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06255) அதேநாள் மதியம் 2.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அதே நாள் இரவு இரவு 10.45 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூருவை சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயில் யஸ்வந்த்பூர், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக இயக்கப்படுகிறது.

இதேபோல், கே.எஸ்.ஆர். பெங்களூரு-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. கே.எஸ்.ஆர். பெங்களூருவில் இருந்து 8-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06257) அதேநாள் மதியம் 2.45 மணிக்கு எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரலை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரலில் இருந்து 8-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06258) அதேநாள் இரவு 10.45 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூருவை சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயில் யஸ்வந்த்பூர், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments