சமதா கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தானிப்பாடியில் நடைபெற்றது.


இந்த கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் சாமுவேல்ராஜ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய முதன்மை பொதுச்செயலாளர் என்.ஏ.கோன் கலந்துகொண்டு கட்சியின் நிலைப்பாடு, வளர்ச்சி குறித்து விளக்கிப் பேசினார். பின்னர் மகளிருக்கான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

மாநில பொதுச்செயலாளர்கள் சின்னதாஸ், பூங்கா மோகன், மாநிலத் துணைத் தலைவர்கள் அந்தோணி டைசன், வேலுச்சாமி உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் வேடம்மாள் உட்பட ஏராளமானோர் தங்களை சமதா கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது



