புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
www.tnsec.tn.nic.in என்ற மாநில தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது.