கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்று சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் அறிவித்துள்ளார். மேலும் 17 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
ஜெருசலேம் புனித பயணத்திற்கு வழங்கப்படும் மானியம் 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
வக்பு வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் உயர்த்தப்படும்.
14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் ரூ.14 லட்சம் செலவில் நூலகம் ஏற்படுத்தப்படும்.
சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு வருமான வரம்பு 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.