ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் அருகே காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த உயர்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கோபால்போரா பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர்.
இதில் சம்பாவைச் சேர்ந்த 36 வயதான ரஜினி பாலா என்னும் ஆசிரியை படுகாயம் அடைந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்திய போலீசார், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் பட்காம் மாவட்டத்தில் அரசு ஊழியரும் காஷ்மீர் பண்டிட்டுமான ராகுல் பட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.