Friday, January 3, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு செல்லும் அவர், தனி படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று பார்வையிடுகிறார். அங்கிருந்தபடி திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட உள்ளார். பின்னர் விவேகானந்த கேந்திரா சென்று பாரத மாதா கோயிலில் வழிபடுகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார்.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு குமரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், நாளை கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு வர சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments