துருக்கி நாட்டின் அப்சின் நகரில் 23 கிமீ தென்மேற்கே இன்று (ஏப்.17) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆகப் பதிவானது. நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. சேதம் குறித்த விவரங்கள் வெளிவரவில்லை.



                                    