Friday, December 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇலங்கைஇலங்கை - எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 15 பேர் கைது

இலங்கை – எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 15 பேர் கைது

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை படகுடன் கைது செய்துள்ளது. இந்திய எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிகழ்வு தொடர் கதையாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த மீனவர்கள் தரப்பில் ஒன்றிய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்து முதல் முறை கைது செய்யப்பட்டால் எச்சரித்து விடுவிக்கப்படுவதாகவும், இரண்டாவது முறை 6 மாத சிறை தண்டனையும், 3வது முறை ஒரு வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 22 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற சம்பவம் மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை படகுடன் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் நகர் துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படை அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. மீன் பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments