தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்றோடு வேட்புமனுத்தாக்கல் முடிகிறது. ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். இது போக மற்ற நான்கு ஓபிஎஸ்களும் சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒருவர் உசிலம்பட்டியில் வசிப்பவர், மற்றொருவர் காட்டூரைச் சேர்ந்தவர், இருவர் மதுரையைச் சேர்ந்தவர்கள். எல்லோரும் சுயேச்சை என்பதால் கண்டிப்பாக வாக்குகள் சிதறும் வாய்ப்புகள் உள்ளன.