Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeசினிமாசூரியின் “கொட்டுக்காளி” ஆக., 23ல் ரிலீஸ்

சூரியின் “கொட்டுக்காளி” ஆக., 23ல் ரிலீஸ்

கூழாங்கல் படத்தின் மூலம் கவனிக்க வைத்தவர் இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ். அடுத்ததாக இவர் இயக்கி உள்ள படம் கொட்டுக்காளி. சூரி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அன்னா பென் நடித்திருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

வாழ்வியல் தொடர்புடைய யதார்த்த படமாக உருவாகி உள்ளது கொட்டுக்காளி. படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் சமீபத்தில் பெர்லின் திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது. மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கேற்று பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி படம் வெளியாக உள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments