Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா

புதுடெல்லி

இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இன்னும் இரண்டு நாட்களில் இங்கிலாந்து செல்வார் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது.

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று (ஆக.5) அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து உடனடியாக அவர் தலைநகர் டாக்காவில் இருந்து இந்தியா புறப்பட்டார். அவர் பயணம் செய்த ராணுவ விமானம், புதுடெல்லி அருகே உள்ள ஹிண்டன் விமானத் தளத்தில் தரை இறங்கியது. இதையடுத்து அவர் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, வங்கதேச நிலவரம் தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “ஷேக் ஹசீனாவுக்கு உதவுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. ஹசீனா அதிர்ச்சியில் உள்ளார். ஷேக் ஹசீனாவின் எதிர்கால திட்டங்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவருடன் பேசும் முன், அவர் ஆசுவாசப்படுத்திக்கொள்ள அவகாசம் அளிக்க விரும்புகிறோம். அதன்படி, எதிர்கால நடவடிக்கையை முடிவு செய்ய ஹசீனாவுக்கு அவகாசம் அளித்துள்ளோம்” என தெரிவித்தார்.

- Advertisment -

Most Popular

Recent Comments