கீவ்
ரஷ்யாவுக்கும், அதன் அண்டை நாடான உக்ரைனுக்கும், கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேல் போர் நடந்து வருகிறது. இரு தரப்பிலும் உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்பட்டுள்ளன.
சமீபகாலமாக, ரஷ்யாவுக்குள் உக்ரைன் படைகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதுடன், குறிப்பிட்ட பகுதிகளை கைப்பற்றி வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள சுட்ஜா என்ற நகரத்தை உக்ரைன் படைகள் கைப்பற்றி விட்டதாக, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று தெரிவித்தார்.
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தின் எல்லை பகுதிக்கான நிர்வாக மையமாக சுட்ஷா நகரம் விளங்குகிறது. இந்தப் பகுதியை தற்போது உக்ரைன் கைப்பற்றி உள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.