Saturday, April 12, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - இந்திய வெளியுறவுத்துறை

ஈரானுக்குச் செல்ல வேண்டாம் – இந்திய வெளியுறவுத்துறை

போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

காஸா, லெபனானில் உள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் பதில் தாக்குதலில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டது.

இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவது அறிவித்தது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தப் பதிவில், “நாங்கள் ஈரானில் தற்போதைய பாதுகாப்பு நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். ஈரானுக்கான அனைத்து அத்தியாவசியப் பயணங்களையும் தவிர்க்குமாறு இந்தியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். தற்போது ஈரானில் வசிப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments