தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கு பெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அதில் மதுவுக்கு அடிமையாகி விட வேண்டாம். போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் உள்ளிட்ட பல்வேறு பதாகைகளை ஏந்திய படி மாணவ ,மாணவியர்கள் கோஷமிட்டபடியும் ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மணிகண்டன் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் மற்றும் ஆண்டிபட்டி நகர் நல கமிட்டி கௌரவத் தலைவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் கல்லூரி துறை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.