சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பீகார் மாநிலத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் வாக்கு திருட்டுக்கு எதிரான “வாக்குரிமை பயணத்தில்” கலந்துக்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெறும் பேரணி கலந்துக்கொண்டு பேசினார். அதன்பிறகு மாலை 4.30 மணியளவில் சென்னை திரும்புகிறார்.
பீகார் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிராக “வாக்குரிமை பயணத்தை” கடந்த ஆகஸ்ட் 17 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தொடங்கினாா். இந்த இந்தப் “வாக்குரிமை பயணம்” அடுத்த மாதம் செப்டம்பா் 1 ஆம் தேதி பட்னாவின் காந்தி மைதானத்தில் நிறைவடைய உள்ளது. இதற்கிடையில் இந்த “வாக்குரிமை பயணம்” சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பயணிக்க உள்ளது.