Wednesday, November 12, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeசினிமா“துள்ளுவதோ இளமை” அபிநய் காலமானார்

“துள்ளுவதோ இளமை” அபிநய் காலமானார்

“துள்ளுவதோ இளமை” அபிநய் இன்று காலை இயற்கை எய்தியிருக்கிறார். இவருக்கு வயது 44.

கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று காலை 4 மணியளவில் காலமானார்.

“துள்ளுவதோ இளமை” திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்களுக்கு பரிச்சயமான அபிநய் தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

ஆனால், அத்திரைப்படங்கள் அவருக்கு பெரிதளவில் வெற்றியைத் தேடித் தரவில்லை.

அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருந்தார். நடிப்பைத் தாண்டி டப்பிங் ஆர்டிஸ்டாகவும் கவனம் பெற்றவர்.

‘துப்பாக்கி’, ‘அஞ்சான்’ உள்ளிட்ட படங்களில் நடிகர் வித்யூத் ஜம்வாலுக்கு குரல் கொடுத்ததும் அபிநய்தான். தமிழ் மட்டுமின்றி மலையாள மொழியிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக பட வாய்ப்புகள் அமையாத அபிநய்-க்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு பல போராட்டங்களை சந்தித்து வந்தார். இன்று காலை அவருடைய இல்லத்தில் அவர் காலமானார். அவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments