Wednesday, November 12, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாடெல்லியில் தாக்குதல் நிகழ்த்திய மருத்துவரின் டிஎன்ஏ-வை பரிசோதிக்க முடிவு

டெல்லியில் தாக்குதல் நிகழ்த்திய மருத்துவரின் டிஎன்ஏ-வை பரிசோதிக்க முடிவு

டெல்லி

தலைநகரில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவம், பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் டெல்லி மற்றும் ஜம்மூ காஷ்மீர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லி செங்கோட்டை நுழைவு வாயில் ஒன்றின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹுண்டேய் i20 கார் நேற்றிரவு வெடித்து சிதறி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அந்த இடத்தை அப்படியே உருக்குலைத்த இந்த சம்பவத்திற்கு பின்னால் பயங்கரவாத சதி இருக்கிறதா என்று தேசியப் புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 12 பேர் இறந்ததாகவும், பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஃபிதாயீன் காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் என்றும், அவர் காஷ்மீரில் உமர் முகமது என்ற பெயரில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

உமர் சமீபத்தில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டதை அறிந்ததும், ஃபரிதாபாத்தில் இருந்து தப்பிச் சென்றதாக உளவுத்துறை சந்தேகிக்கிறது.

வெடித்த காரில் இருந்த நபரின் டிஎன்ஏ, உமரின் குடும்ப உறுப்பினர்களின் மாதிரிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த பின்னர் தான், குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஐ20 காரை ஓட்டிச் சென்றது யார் என்பது உறுதி செய்யப்படும் என ஈடிவி பாரத்திடம் புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ் இ முகமது (JeM) அமைப்புடன் உமரை இணைத்துப் பார்க்கும் புலனாய்வு அதிகாரிகள், அவர் பீதியடைந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தி இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் இந்தியப் புலனாய்வு அமைப்புகள் சேர்ந்து கடந்த 30 நாட்களில் பல பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர். அந்த வகையில், பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments