நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ஆனந்த் ராஜ், ராஜ்கிரண், கருணாகரன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. ஆனால், படத்தின் அறிவிப்பு வெளியாகி 2 ஆண்டுகளாகியும் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் டிசம்பர் 12-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது.



