வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சூழலில், தமிழ்நாட்டில் 77 லட்சத்து 52 ஆயிரம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த மாதம் 4ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் சூழலில், டிசம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, 6 கோடியே 36 லட்சம் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு, அதில், 5 கோடியே 18 லட்சம் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் 25 லட்சத்து 72 ஆயிரம் பேர், தொடர்பு கொள்ள முடியாதவர்களில் 8 லட்சத்து 95 ஆயிரம் பேர், நிரந்தமாக இடம் பெயர்ந்தவர்களில் 39 லட்சத்து 27 ஆயிரம் பேர் என ஒட்டுமொத்தமாக 77 லட்சத்து 52 ஆயிரம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட ரீதியாக பார்க்கையில், தலைநகர் சென்னையில் மட்டும் 10 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அங்கு உயிரிழந்தவர்களில் மட்டும் 1 லட்சத்து 49 ஆயிரம் பேர் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.



