அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ஈரான் அரசு ஊடகம் நேரடியாக கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் நடைபெறும் போராட்டங்களுக்கு டிரம்ப் ஆதரவு தெரிவித்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்க ராணுவம் தலையிடும் என அவர் எச்சரித்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நிலவி வரும் மோதல் போக்கு, இந்த நேரடி மிரட்டலால் மேலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.



