செனகல் நாட்டு வீரர் சேடியோ மானே. எகிப்து நாட்டு கால்பந்து அணி வீரர் முகமது சாலா. இருவரும் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார்கள். இவர்கள் இடம் பிடித்துள்ள லிவர்பூல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 2018-19 யூரோ சாம்பியன்ஸ் லீக்கை கைப்பற்றியது. அத்துடன் நான்கு கோப்பைகளை வென்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் உள்ள கால்பந்து வீரர்களில் சிறந்தவருக்கு இந்த வருடத்திற்கான ஆப்பிரிக்க வீரர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.
2017 மற்றும் 2018 – ல் முகமது சாலா இந்த விருதை வாங்கினார். இந்த முறையில் விருதை பெற்று ஹாட்ரிக் படைப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் சேடியோ மானே தென்ஆப்பிரிக்கா வீரர் விருதை வென்றார்.விருது பெற்ற மானேவுக்கு முகமது சாலா பாராட்டு தெரிவித்துள்ளார்.