Friday, January 3, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுகின்னஸ் சாதனையில் இடம்பெற்ற உலகின் மிக குள்ளமான மனிதர் உயிரிழந்தார்

கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற உலகின் மிக குள்ளமான மனிதர் உயிரிழந்தார்

உலகில் மிக குள்ளமானவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற நேபாள நாட்டை சேர்ந்த ககேந்திர தாபா மாகர் உயிரிழந்தார். 1992 ஆம் ஆண்டு பிறந்த ககேந்திர தாபா மாகர், வெறும் 2 அடி மட்டுமே உயரம் கொண்டவர். 27 வயதான ககேந்திர தாபா மாகர் நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் வசித்து வந்தார். 
 
சில நாட்களாக நிமோனியா காய்யச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். உலகில் மிகவும் குள்ளமான மனிதர் என கடந்த 2011 ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments