தமிழில், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2 உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், அமலா பால். ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இப்போது, அதோ அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதையடுத்து இப்போது மலையாளத்தில் ஆடுஜீவிதம் படத்தில் நடிகர் பிருத்வி ராஜுடன் நடித்து வருகிறார். தெலுங்கில் லஸ்ட் ஸ்டோரில் ரீமேக்கில் நடித்துவருகிறார். இந்தியிலும் நடித்து வருகிறார். இவர் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், நடிகை அமலா பாலும் ஏ.எல்.விஜய்யும் பிரிவதற்கு நடிகர் தனுஷ்தான் காரணம் என்று விஜய்யின் தந்தையும் தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன் சமீபத்தில் புகார் கூறியிருந்தார். அவர் கூறியது:
திருமணத்துக்குப் பின் படங்களில் நடிக்க வேண்டாம் என்று அமலா பால் முடிவு செய்திருந்தார். ஆனால், நடிகர் தனுஷ் அவர் தயாரித்த ‘அம்மா கணக்கு’ படத்தில் அவரை நடிக்க வைத்தார். அதன் பிறகுதான் அமலாபால் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். இதுதான் விஜய், அமலா பால் பிரிய காரணமாகி விட்டது என்று அழகப்பன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஏ.எல்.அழகப்பனின் புகார் பற்றி, நடிகை அமலாபாலிடம் கேட்டபோது, அவர் மறுத்துள்ளார். அவர் கூறியது:
எப்போதோ நடந்த சம்பவத்தை இப்போது கேட்கிறீர்கள். எனது விவாகரத்து சர்ச்சை தேவை இல்லாதது. அது என் சொந்த விஷயம். விவாகரத்து வாங்கிய முடிவு முழுக்க என்னுடையதுதான். அதற்கு வேறு யாரும் காரணமில்லை.
வேறு ஒருவரை காரணமாக வைத்து விவாகரத்தை யாராவது வாங்குவார்களா? தனுஷ் என் நலம் விரும்பி. இந்த விஷயத்தில் வேறு எதையும் பேச விரும்பவில்லை என்றார். ‘நீங்கள் ஒருவருடன் காதலில் இருப்பதாக சொன்னீர்களே? எப்போது திருமணம்’ என்று கேட்டபோது, ‘அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. நான் நடித்துவரும் படங்களை முடித்த பிறகு எனது காதல் பற்றி சொன்னது போல திருமணம் பற்றியும் அறிவிப்பேன் என்றார்.