மும்பை
இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி, இன்று(பிப் 28) காலை கடும் சரிவுடனேயே வர்த்தகத்தை துவக்கின. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,032 புள்ளிகள் சரிவடைந்து 38,713 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
தேசிய பங்குச்சந்தை நிப்டி 306 புள்ளிகள் சரிவடைந்து, 11, 327 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.கொரோனா வைரஸ் அச்சம் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவையே, பங்குச்சந்தைகள் சரிவுக்கு காரணமாக அமைந்தது. கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.