பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், குரூப் – ஏ பிரிவில் இன்று நடைபெற்ற 9 வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசத்தொடங்கியது.
இதன்படி, முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இந்த வெற்றியின் மூலம், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி , உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.