விஜய்யின் மாஸ்டர் படத்தில் இருந்து இரண்டாவது பாடல் ‘வாத்தி கமிங் ஒத்து’ பாடல் நேற்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோ தற்போது youtube தளத்தில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. தற்போது வரை அந்த விடியோவுக்கு 5.3 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்கள் பட்டியலில் வாத்தி கமிங் பாடல் உலக அளவில் 7வது இடத்தை பிடித்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். மாஸ்டர் படத்தின் முதல் பாடல் குட்டி ஸ்டோரி வெளியானபோது அது உலக அளவில் மூன்றாவது இடம் பிடித்து சாதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15ம் தேதி) இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க இசை வெளியீட்டு விழா 5 நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்படுகிறது. அது டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
இந்த விழாவில் விஜய் என்ன பேசுவார் என்று கேட்கத்தான் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். அதில் விஜய் தன் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை பற்றியும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.