க்ரீன்லாண்ட் மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகள் 1990களில் உருகியதைவிட ஆறு மடங்கு அதிகமாக உருகுவதாக புதிய ஆய்வொன்று சுட்டிக்காட்டுகிறது. புவி வெப்பமயமாதலால் 1992 – 2017 இடையிலான காலகட்டத்தில் மட்டும் 6.4 டிரில்லியன் டன் பனிக்கட்டிகள் உருகி உள்ளன.
இதன் காரணமாக 17.8 மி.மீ அளவுக்குக் கடல்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலை தொடருமானால் 2100ஆம் ஆண்டுக்குள் 40 கோடி மக்களின் எதிர்காலம் கேள்விகுறியாகும் என இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. ஐஸ் ஷீட் மாஸ் பேலன்ஸ் இன்டர்கம்பரிசன் திட்டம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.