நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படக்குழு ரிலீஸ் தேதியை இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்காமல், ஏப்ரல் 2020 என்றே மறைமுகமாக அனைத்து போஸ்டர்களிலும் தெரிவித்து வந்தது. ஆனால், ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் என்றும் கூறப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள் இம்மாதம் 31ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
அதேபோல், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவிலும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும் விஜய் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பும் வசூலும் கிடைக்கும் என்பதால், அங்கும் திரையரங்குகள் திறக்கப்படும் வரை மாஸ்டர் படம் வெளியாகாது என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில் தற்போது மாஸ்டர் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மாஸ்டர் திரைப்படம், திட்டமிட்டபடி வெளியாகும். ஏப்ரல் 9-ம் தேதிக்குள் கொரோனா பாதிப்பின் நிலைமை சீராகும் என நம்பிக்கை தெரிவித்துள்ள படக்குழுவினர், வீட்டுக்குள் முடங்கியுள்ள மக்களை திரையரங்கிற்கு அழைத்துவரும் படமாக மாஸ்டர் இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.