Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் நிலக்கரி இறக்குமதி 4.8% உயர்வு

நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் நிலக்கரி இறக்குமதி 4.8% உயர்வு

புதுடெல்லி

2017-2018 ஆம் நிதி ஆண்டில் நாட்டின் மொத்த நிலக்கரி இறக்குமதி (உயர்தர மற்றும் சாதாரண நிலக்கரி) 20.83 கோடி டன்னாக இருந்தது. அதன் மதிப்பு ரூ.1.38 லட்சம் கோடியாகும். சென்ற நிதி ஆண்டில் (2018-19) ரூ.1.70 லட்சம் கோடிக்கு 23.52 கோடி டன் இறக்குமதி ஆகி இருக்கிறது.

அனல்மின் நிலையங்களில் நிலக்கரி முக்கிய எரிபொருளாக இருந்து வருகிறது. நம் நாட்டில் நிலக்கரி உற்பத்தி அதிகமாக இருந்தாலும் தேவையை ஈடு செய்யும் வகையில் உற்பத்தி இல்லாததால் அதிக அளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 22 கோடி டன்னாக உள்ளது.

சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 21 கோடி டன்னாக இருந்தது. ஆக, இறக்குமதி 4.8 சதவீதம் அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 1.70 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 14 சதவீதம் குறைவாகும். கோக்கிங் கோல் எனப்படும் உயர்தர நிலக்கரி இறக்குமதி (39 லட்சம் டன்னில் இருந்து) 31 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

நடப்பு 2019-20 ஆம் நிதி ஆண்டில் நிலக்கரி இறக்குமதி 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என கேர் ரேட்டிங் நிறுவனம் மதிப்பீடு செய்து இருக்கிறது. பிட்ச் சொல்யூஷன்ஸ் மேக்ரோ ரிசர்ச் நிறுவனம், அடுத்த 9 வருடங்கள் (2028 வரை) நிலக்கரி இறக்குமதி ஆண்டுக்கு சராசரியாக 4.3 சதவீதம் உயரும் என மதிப்பீடு செய்துள்ளது.

உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் சர்வதேச நிலக்கரி உற்பத்தியில் மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. நம் நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும், அதன் துணை நிறுவனங்களும் 80 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments