கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் கொட்டுப்போன ரத்தத்தை செலுத்தி 15 கர்ப்பிணி பெண்கள் இறந்துவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இதில் தேதி மார்ச் 27ஆம் தேதி என்று குறிப்பிடப்பட்டு அதாவது கடந்த வெள்ளியன்று இந்த சம்பவம் நடந்தது போல காட்டப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ பணியாளர்களின் பணிகளை குறை கூறியும் இந்த மீம்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவும் நிலையில் இவர்களின் சேவைகளை பார்த்தீர்களா என்றும் கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது?
ஆனால், உண்மையைப் பார்த்தால், இந்த செய்தி வெளியிடப்பட்டது கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி. அதாவது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவத்தை, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது போல் மக்களை குழப்பும் விதத்தில் இணையத்தில் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
தற்போது நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவ பணியாளர்கள் பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் சில பொறுப்பற்ற சைக்கோக்கள், மக்களிடம் இதுபோன்ற தவறான கருத்துக்களை பரப்பி தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.